info@dtet.gov.lk

+94 112 34 8897 / +94 112 43 9078

ஏனைய சேவைகள்

  • முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை.
    தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் கோரப்படும் அதே வேளை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் ஒழுங்கமைப்பு, மேற்பார்வை, நடத்தல் ஆகியவற்றின் மீது தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் பரீட்சைகளை நடத்தி, அவற்றில் சித்தியடையும் விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் மூலம் உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் (இப்பரீட்சைக்கு 80% வகுப்புகளுக்குப் பங்குபற்றும் அதிபரின் விதப்புரைகள் உள்ள விண்ணப்பகாரர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்).
  • தேசிய தொழில் தகைமைப் பாடநெறிகளை (NVQ) கற்கும் மாணவர்களுக்காக.

    தேசியத் தொழில் தகைமைப் பாடநெறிகளைக் (NVQ) கற்கும் மாணவர்களுக்காகப் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவினாலும் உரிய தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பணிப்பாளர்களின் / அதிபர்களின் மேற்பார்வையின் கீழும் இயைபுபடுத்தலின் கீழும் மதிப்பீட்டாளர்களின் (Assessors) மூலம் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றின் பேறுகளின் பேரில் மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) மூலம் உரிய NVQ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை.

    குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களுக்காக இறுதிப் பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ்த் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்டு, சித்தியடைந்த விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • வேறு நிறுவகங்களின் சேவையாளர் குழுக்களுக்காகப் பரீட்சைகளை நடத்தல்.

    வேறு நிறுவகங்களில் சேவையாற்றும் சேவையாளர் குழுக்களுக்காக இத்திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேறபார்வையின் கீழ்ப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அப்பிரிவின் மூலம் பேறுகள் வழங்கப்படும்.

இத்திணைக்களத்தின் கீழ் உள்ள எல்லாத் தொழினுட்பவியல் கல்லூரிகளிலும் / தொழினுட்பக் கல்லூரிகளிலும் தொழில் வழிகாட்டல் அலுவலரின் கீழ்த் தொழில் வழிகாட்டல் அலகு நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் மூலம் பயிற்சிக்கு / தொழிலுக்கு வழிகாட்டப்படும் விருப்பமுள்ள இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர்கள், பெற்றோர்கள், வயதுவந்தவர்கள், ஏனைய அரசாங்கத் துறைகளிலும் தொண்டர் அமையங்களிலும் உள்ள அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலிலும் உகந்தவாறு அவ்வப் பிரசேதங்களில் நடத்தப்படும் கண்காட்சி அலுவல்களிலும் ஒத்துழைப்பை நல்கும்.

தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேரப் பாடநெறிகளைக் கற்று முடிக்கும் மாணவர்களுக்காகத் தொழிலில் ஈடுபடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படும்.

  • தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தொழில் வழிகாட்டல் நிலையங்களின் மூலம் இத்தொழினுட்பக் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்திசெய்யும் மாணவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.
  • அதன் பின்னர் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் உள்ள தரவுத் தொகுதியில் இருக்கும் வெற்றிடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தப்படுவர்.
  • தொழினுட்பவியல் கல்லூரிகளின் / தொழினுட்பக் கல்லூரிகளின் தரவுத் தொகுதியில் வெற்றிடங்கள் இல்லாதபோது அம்மாணவர் அட்டவணைகளைத் தலைமை அலுவலகத்தின் கைத்தொழில் இயைபுபடுத்தல், தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வழிப்படுத்தி, பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தல்.
  • அன்னியச் சேவைத் தொழில் பணியகத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான பாடநெறிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களை வழிப்படுத்தலும் அதன் மூலம் பதிவுசெய்த தொழில் நிறுவகங்களினூடாக அன்னியத் தொழில்களுக்கு வழிப்படுத்தலும்.
  • பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்கள் பற்றிய தகவல்களை jobs net இற்கு வழிப்படுத்தல்.

தொழில் கல்வியைப் பூர்த்திசெய்த சான்றிதழை வைத்திருப்பவர்கள், சுய தொழிலை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் இளைஞர்கள், தற்போது சுய தொழிலை நடத்தும் இளைஞர்கள் ஆகியோருக்கான முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொழில் வழிகாட்டல் அலகின் மூலம் பின்வருமாறு நடத்தப்படும்.

  • ඉதொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் கல்வியைப் பெறும் எல்லா மாணவர்களுக்கும் முயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்.
  • அறிவுறுத்திய பின்னர் முயற்சியாகச் செயற்படுத்த விரும்பும் மாணவர்களுக்காக 14 நாள் முயற்சிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தல்.
  • பயிற்சி பெறும் முயற்சியாளர்களுக்குத் தேவையான கடனைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை நல்குதல்.

தேர்ச்சி அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் முயற்சி அபிவிருத்திக்குரிய அறிவுறுத்தல் கைந்நூல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விவரங்களுக்காகக் கிட்டிய தொழினுட்பவியல் கல்லூரியின் / தொழினுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் அலகுடன் தொடர்புகொள்க.

தொழில் பயிற்சியின் மூலம் அல்லது தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தற்போது பெற்றுள்ள தேர்ச்சிகளை மதிப்பீட்டிற்கு உட்படுத்தி (Recognition of Prior Learning – RPL) தேசியத் தொழில் தகைமைகள் (NVQ) சான்றிதழ்களை வழங்கல் இதன் நோக்கமாகும்.

சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை:

  • தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள பின்வரும் தொழினுட்பக் கல்லூரிகளின் மூலம் இனங்காணப்பட்ட துறைகளுக்காக RPL இன் கீழ் NVQ சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ரூ. 250.00 ஐச் செலுத்திப் பதிவுசெய்ய வேண்டும்.
  • இதன் பின்னர் மதிப்பீட்டு அலுவலரும் (Assessor) நீரும் ஒன்று சேர்ந்து வசதியான ஒரு தினத்தில் தேர்ச்சி பற்றிய சான்றுகள், கோப்புகளைப் பரிசோதித்தல், செய்முறை வேலை செய்தலை அவதானித்தல், சான்றுகள் பலமிக்கனவாக இராத சந்தர்ப்பங்களில் செய்முறைப் பரீட்சையையும் அறிமுறைப் பரீட்சையையும் நடத்தல் ஆகியன மேற்கொள்ளப்படும். செய்முறைப் பரீட்சையை நடத்தத் தேவையான மூலப்பொருள்கள், அவற்றுக்கான செலவுகள் என்பன பற்றி விண்ணப்பகாரருக்கு அறிவிக்கப்படும். அப்பணத்தைத் தொழினுட்பக் கல்லூரிக்குச் செலுத்த வேண்டும்.(இப்பரீட்சையை நடத்துமுன்பாக விண்ணப்பகாரருக்குத் தேவையெனின் உரிய கல்லூரியின் மூலம் செய்முறைப் பரிச்சயக் கற்கையைப் பெறலாம். அதற்காகக் கல்லூரியின் மூலம் விதிக்கப்படும் கட்டணத்தை விண்ணப்பகாரர் செலுத்த வேண்டியிருக்கும்.
  • இம்முன் கற்றல் மதிப்பீட்டின் பின்னர் அதன் பேறுகள் தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தின் பரீட்சைப் பிரிவுக்கும் தேசிய தொழில் பயிலுநர், தொழினுட்பப் பயிற்சி அதிகாரசபைக்கும் (NAITA) சமர்ப்பிக்கப்படும்.
  • மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவினாலும் (TVEC) NAITA யின் பணிப்பாளர் (மதிப்பீடு) கையொப்பத்துடனும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • இப்பரீட்சைக்கான முழு அதிகாரசபை NAITA ஆகையால், மேலதிக விவரங்களுக்கு NAITA இன் NVQ பிரிவை அணுகுக.
  • IVETA கொழும்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கொழும்புத் திட்டப் பதவிநிலைப் பயிற்சிக் கல்லூரியுடன் இயைபுபடுத்தலும் அதனூடாகப் போதனாசிரியர் பயிற்சியையும் கருத்தரங்குகளையும் நடத்தலும்.
  • சர்வதேசத் தளம் அங்கீகரித்த நிறுவகங்களுடன் தொடர்புகளை உருவாக்கல்.
    உ-ம். TAFE Australia பாடநெறிகளை நடைமுறைப்படுத்தல், City and Guild பாடநெறிகளை நடைமுறைப்படுத்தல்
  • IVETA உலகத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடன் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சர்வதேச மட்டத்தில் கருத்தரங்குகளையும் நடத்தல்.
  • சர்வதேச மட்டத்தில் தொழினுட்பக் கல்விப் பயிற்சிக் கருத்தரங்குகளைத் தேசியரீதியாக நடத்தச் செயற்படுதல்
  • சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்படத்தக்க தொழினுட்பக் கல்வி நாட்குறிப்பேட்டினைத் தயாரிக்கத் தொடங்குதல்.
  • இதன் கீழ் வர்த்தக, கைத்தொழில் மன்றம் (Chamber of Commerce and Indusry), இலங்கை முதலீட்டுச் சபை (Board off Investment) வாண்மைத் தொழிலாளர்களின் அமையம் (OPA) போன்ற நிறுவகங்களுடன் நேரடித் தொடர்புகளை உருவாக்குவதனூடாகத் தொழினுட்பக் கல்வியின் பண்பறி விருத்தியை ஏற்படுத்தல்.
  • கைத்தொழில் துறைக்குப் பொருத்தமானவாறு தொழினுட்பக் கல்விப் பாடநெறியை உருவாக்குதலும் தொழினுட்பக் கல்வி நிறுவகங்கள் கைத்தொழில் துறையில் இன்றியமையாதவை என்பதை உறுதிப்படுத்தலும்.
  • இந்நிகழ்ச்சித்திட்டங்கள் மகிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தில் குறிப்பிட்ட தொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்கான யோசனைகளுடன் சேர்ந்து 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

About Us