info@dtet.gov.lk

+94 112 34 8897 / +94 112 43 9078

மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறை

 

மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறை

 

  • பாடநெறிக் கற்கை ஆண்டு ஒவ்வோர் ஆண்டிலும் யனவரி மாதம் தொடங்கி திசெம்பர் மாதம் முடிவடையும்.
  • ஒவ்வோர் ஆண்டிலும் செப்ரெம்பர் / ஒக்ரோபர் மாதத்தில் வெளியிடப்படும் அரசாங்க வர்த்தமானியின் மூலம் பாடநெறிகளின் விவரமும் அவை நடத்தப்படும் தொழினுட்பக் கல்லூரிகள் இடம்பெறும் தகவல்களும் வெளியிடப்படும். அதில் வெளியிடப்படும் மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த இறுதித் தேதிக்கு முன்பாக உரிய தொழினுட்பக் கல்லூரியின் அதிபருக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
  • ஒருவர் தமக்கு விருப்பமான எந்தப் பாடநெறிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • உளச்சார்புப் பரீட்சையின் அதோடு / அல்லது நேர்முகப் பரீட்சையின் பேறைக் கொண்டு விண்ணப்பகாரர்கள் தெரிந்தெடுக்கப்படுவர்.
  • மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக மேலதிக விவரங்களை விண்ணப்பகாரர் அண்மையில் உள்ள தொழினுட்பக் கல்லூரியில் இருக்கும் தொழில் வழிகாட்டல் நிலையத்திலிருந்து பெறத்தக்கதாக இருக்கும் அதே வேளை தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் தகைமைகளுக்கேற்பப் பாடநெறிகளுக்குப் பிரவேசிப்பதற்குப் பதிவுசெய்யலாம் (தொழினுட்பக் கல்லூரிகளில் அமைந்துள்ள தொழில் வழிகாட்டல் நிலையங்களின் தொலைபன்னி எண்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன).
பாடநெறிக் கட்டணங்கள் :

முழு நேரப் பாடநெறிகளுக்காக எக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது. எனினும், பகுதி நேர / மாலை நேரப் பாடநெறிகளைக் கற்பவர்களிடமிருந்து பின்வருமாறு கட்டணம் அறவிடப்படும்.

  • ஓர் ஆண்டிற்குக் கூடிய பகுதி நேர / மாலை நேரச் சான்றிதழ்ப் பாடநெறிகளுக்காகக் கற்கை ஆண்டுக்கு ரூ. 2000.00
  • ஓர் ஆண்டு அல்லது அதற்குக் குறைந்த குறுகிய காலப் பகுதி நேர / மாலை நேரப் பாடநெறிகளுக்காகக் கற்கை ஆண்டுக்கு ரூ. 1500.00

About Us